விசேட அதிரடிப்படையினரின் வாகனத்தை தாக்கிய இருவர் மருத்துவமனையில்!

282 0

நீர்கொழும்பு, குரண பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் பரஸ்பரம் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் பொலிஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், மேலும் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் நீர்கொழும்பு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் பயணித்த வேன் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இதன்போது அதிரடிப்படையினர் மீது சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர். வேன் வாகனத்தில் இருந்து சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment