இன்று அதிகாலை வீடு ஒன்றில் துப்பாக்கி பிரயோகம்!

262 0

பத்தேகம – கொடவத்த தெற்கு பிரதேசத்தில் வீடு ஒன்றில் இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த துபாக்கி சூட்டில், ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் கராப்பிடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பத்தேகம நீதவான் நீதிமன்றின் பின்புறத்தில் குறித்த வீடு உள்ளது.

இந்நிலையில், துப்பாக்கி சூட்டினை மேற்கொள்வதற்கு வந்துள்ள நபர் கதவை உடைத்து வீட்டினுள் சென்றுள்ளார்.

வீட்டில் நித்திரை செய்து கொண்டிருந்த நபரை சுட்டு விட்டு தப்பிச் செல்வதற்கு முயன்றுள்ளார்.

இதன்போது, துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் மற்றும் அவரது மனைவி துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்ட நபருடன் சண்டையிட்டுள்ளனர்.

இதனிடையே, மனைவி துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்ட நபர் மீது பொருள் ஒன்றினால் தாக்கியுள்ள நிலையில், குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபரின் கை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், அவர் முன்னர் கடற்படையில் பணி புரிந்துள்ள நிலையில், தற்போது முச்சக்கர வண்டி சாரதியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பத்தேகம காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சந்தேக நபரின் கைபேசி மற்றும் கொண்டு வந்து துப்பாக்கியினை விட்டுச் சென்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a comment