ஊவா மாகாணத்தின் சுகாதார, சுதேச வைத்திய மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சராக அநுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அந்த மாகாண ஆளுநரால் நேற்று இவர் இந்தப் பதவிக்காக நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
முன்னதாக அந்தப் பதவியில் இருந்த குமாரசிறி ரத்ணாயக்கறிக்கு பதிலாகவே அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

