ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் நாட்களில் கைது

542 18

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவரை கைது செய்து விளக்க மறியலில் வைக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி ஷிரந்தி ராஜபக்ச குற்ற விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர் கைது செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை வழக்கு தொடர்பிலேயே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் யோஷித ராஜபக்சவும் விசாணைக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment