திருகோணமலை – பாலையூற்று முருகன் கோயிலடியில் 100 கிராம் கேரளா கஞ்சாவுடன் 22 வயதுடைய வாலிபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விஷத் தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் திருகோணமலை கிளைக்கு இன்று கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
அவர் வழங்கிய வாக்குமூலத்தை வைத்து அநுராதபுர சந்தியில் மூதூர் பாலைநகரைச் சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க வாலிபரை 1100 கிராம் கேரளா கஞ்சாவையும் அவர் வழங்கிய தகவலினால் மரத்தடிச் சந்தி கொத்தி ஒழுங்கையில் வைத்து மேலும் 250 கிராம் கேரளா கஞ்சாவுடன் பிறிதொருவரையும் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் கைதுசெய்தனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மூவரையும், 1450 கேரள கஞ்சாவையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வகையில் திருகோணமலை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

