கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸார் மீதான வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டப் பிரிவினரால் நேற்று முன்தினம் இரவு இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த சத்தியசாகீத்தியன் மற்றும் கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த சண்முகராசா சானுஜன் ஆகியோரே கைதுசெய்யப்பட்டனர்.

