மத்தளை விமான நிலையத்தின் பங்காளியாகும் இந்தியா?

333 0

ஹம்பாந்தோட்டை, மத்தளை விமான நிலையத்தை அரச மற்றும் தனியார் இணைந்த அதிக வருமானம் பெரும் விமான நிலையமாக மாற்றும் நோக்கில் அதன் பங்காளியாகும் யோசனை இந்திய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டது. 

இது சம்பந்தமாக ஆராய்ந்து பார்ப்பதற்கு அமைச்சுக்களின் செயலாளர்கள் அடங்கிய குழுவொன்றை அமைப்பது தொடர்பாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்த யோசனைக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது சம்பந்தமாக அமைச்சரவை அவதானம் செலுத்தியுள்ளது என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக கூறினார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்

Leave a comment