காணி உறுதிகள் வழங்க நடவடிக்கை

316 0

வளவை மற்றும் மகாவலி ´எச்´ வலய விவசாயிகளுக்கான காணி உறுதிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வு இன்றும் நாளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

வளவை விவசாயிகளுக்கான உறுதிகள் இன்றும், மகாவலி ´எச்´ வலய விவசாயிகளுக்கான உறுதிகள் நாளையும் (12) வழங்கப்படவுள்ளன.

வளவை விவசாயிகளுக்கு 500 காணி உறுதிகள் வழங´க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து இலங்கையர்களுக்கும் தமக்கென காணி மற்றும் வீட்டு உரிமை இருக்க வேண்டும் எனும் கொள்கைக்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனைக்கேற்ப இந்த காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன.

Leave a comment