சர்சைக்குரிய பிணை முறி விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவில், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தெளிவாக சாட்சியுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
‘ரவி கருணாநாயக்க, அமைச்சு பதவியில் இருந்து விலகியதால் மாத்திரம் அந்த பிரச்சினை தீர்ந்து விடாது.
இந்த விடயத்தில் அரசாங்கம் நீதியை வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

