முஸ்லீம் இளைஞர்களின் விளையாட்டுக் கழகங்களிற்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு – சாள்ஸ்

331 0

விளையாட்டுத்துறையின் பிரதி அமைச்சர் கரிஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக மன்னார் மாவட்டத்தில்  முஸ்லீம் இளைஞர்களின் விளையாட்டுக் கழகங்களிற்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்து பாகுபாட்டை ஏற்படுத்துகின்றார் என இ.சாள்ஸ் நிர்மலநாதன்  நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

விளையாட்டுத்துறையின் பிரதி அமைச்சர் கரிஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக மன்னார் மாவட்டத்தில்12 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளார் ஆனால் அனைத்துமே   முஸ்லீம் இளைஞர்களின் விளையாட்டுக் கழகங்களிற்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்து பாகுபாட்டை ஏற்படுத்துகின்றார். அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளிலும் குறித்த அமைச்சின் ஊடாக மன்னார் மாவட்டத்திலே மொத்தம்  விளையாட்டுக் கழகங்களிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு 12 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களில் ஒன்றுகூட தமிழ் இளைஞர்கள் வாழும் பிரதேசத்து விளையாட்டுக் கழகம் கிடையாது. இவ்வாறு வேண்டுமென்றே ஓர் அமைச்சு செயல்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. தனி ஓர் பிரதேசத்திற்கோ அல்லது மதத்திற்கோ உரித்தான அமைச்சு அல்ல விளையாட்டுத்துறை அமைச்சு . எனவே இவ்வாறு பிரதி அமைச்சர் செயல்படுவது தொடர்பில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இந்தவேளை குறிப்பிட்ட பிரதி அமைச்சர் கரிஸ் இது தவறான கூற்று மன்னார் மாவட்டத்திலே பள்ளிமுனை நகரசபைநின் கழகத்திற்கும் 33 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. என்றார்

இதற்கு மீண்டும் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் அந்த நிதியானது விளையாட்டுத்துறை அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நாம்  நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்கவிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் அவரின் அமைச்சின் ஊடாகவே  ஒதுக்கீடு செய்யப்பட்டதே அன்றி விளையாட்டுத்துறை அமைச்சர் அதற்கு ஒரு ரூபா பணம்ஏனும் வழங்கப்படவில்லை. சபையை தவறாக வழி நடத்தக்கூடாது . என்றார்.

Leave a comment