கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜனநாயகத்தையும் சமூக ஒற்றுமையையும் மேம்படுத்த பாடுபட்டோம் அடுத்ததாக பொருளாதாரத்தை மேம்படத்தவும் பாடுபடுவதோடு குறுகிய நோக்கோடு கிணற்றுத்தவளைகளாக வாழ்வோரின் சதிகளையும் முறியடிப்போம்.என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
வட மாகாண சுங்கத்திணைக்களத்தின் அலுவலகம் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியின் தெல்லிப்பளைப் பகுதியில் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அலுவலகத்தினையும் பெயர்ப்பலகையினையும் திறந்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
எமது அரசு கடந்த இரண்டு ஆண்டு ஆட்சிக் காலத்தில் ஜனநாயகத்தையும் சமூக ஒற்றுமையையும் மேம்படுத்த பாடுபட்டோம் அடுத்ததாக பொருளாதாரத்தை மேம்படத்தவும் பாடுபடுவதோடு குறுகிய நோக்கோடு கிணற்றுத்தவளைகளாக வாழ்வோரின் சதிகளையும் முறியடிப்போம். அதேவேளை இந்தப்பகுதியில் 34 ஆண்டுகளின் பின்னர் சுங்கத் திணைக்களம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முதன்முதல் கொழும்பு , காலி , யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலேயே இயங்கியது . அவ்வாறு யாழில் இயங்கிய அலுவலகம் 83ம் ஆண்டு ஏற்பட்ட கலவரம் காரணமாக இயங்காமல்போனது . அதன் பின்னர் 2011ம் ஆண்டில் யாழ். பிரதான தபாலகத்தின் ஓர் பகுதியில் இயங்கிய சுங்க அலுவலகம் இன்று தனியான அலுவலகமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த அலுவலகத்தின் மூலம் இப் பகுதியில் இடம்பெறும் கடத்தல் சட்டவிரோத பொருட்கள் எடுத்துவருதல் என்பன கட்டுப்படுத்தப்படுவதோடு சட்டத்தைனையும் பேணமுடியும்.
அதேநேரம் கடந்த தசாப்த காலங்களில் சட்டங்களை புறக்கணித்து சட்டவிரோத வர்த்தகத்திலும் பலர் ஈடுபட்டனர் இனி வரும் காலத்தில் அவை தடுக்கப்படும். என்றார்.
குறித்த நிகழ்வில் நிதி அமைச்சருடன் பிரதி நிதி அமைச்சர் , சிறுவர் மற்றும் மகளிர் இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவான் , மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் , சயந்தன் ஆகியோருடன் சுங்கத்திணைக்கள அதிகாரிகள் , இராணுவ மற்றும் கடற்படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

