தேர்தலை பிற்போடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி எதிர்ப்பு

416 0

தேர்தலை பிற்போடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்று கூட்டத்தின்போது, இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மாகாண சபை தேர்தல்களை ஒரே நாளில் நடத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றை சமர்ப்பிக்க இதற்கு முன்னர் அரசாங்கம் தீர்மானித்தது.

எனினும் இவ்வாறு தேர்தலை பிற்போடுவது பொருத்தமானது அல்லவென ஸ்ரீ லங்கா மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Leave a comment