சைட்டத்தை தடைசெய்ய கோரி 6 மாவட்டங்களில் போராட்டம்

305 0
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை தடை செய்ய வலியுறுத்தி 6 மாவட்டங்களின் மருத்துவமனைகளுக்கு முன்னால் சத்தியாகிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டு குழு மற்றும் அவர்களின் பெற்றோர் சங்க உறுப்பினர்களே இந்த சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, கொழும்பு, ரத்தினபுரி குருநாகல், கேகாலை, அநுராதப்புரம் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்;டங்களின் மருத்துவமனைகளுக்கு முன்னால் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
குறித்த மருத்துவமனைகளுக்கு முன்னால் கூடாரம் அமைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக்குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத் தெரிவித்துள்ளார்.
மாத்தறை மருத்துவமனைக்கு முன்பாக கூடாரம் ஒன்று அமைக்க முற்பட்ட போது அதற்கு காவற்துறையினர் எதிர்ப்பு வெளியிட்டதாக மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.
அதேநேரம், மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டு குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத் உள்ளிட்ட ஐந்து பேரை உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், சைட்டம் பிரச்சினை காரணமாக 8 மருத்துவ பீடத்தை சேர்ந்த 6 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்

Leave a comment