இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் யார்?

323 0
இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துரையாடியதன் பின்னர் புதிய வெளிவிவகார அமைச்சர் நியமிக்கப்படுவார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிவிவகார அமைச்சு பதவி தமது கட்சிக்கு உரித்துடையது என ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக நிச்சயமாக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவரே அந்த பதவிக்காக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான இறுதி தீர்மானம் ஜனாதிபதி மற்றும் பிரதமரால் எதிர்வரும் சில தினங்களில மேற்கொள்ளப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Leave a comment