இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் சேவையாற்றும் மருத்துவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொடர் சேவைப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளனர்.அரச மருத்துவ அதிகாரிகள் சங்க செயலாளர் ஹரித்த அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்
அந்த மாகாணங்களில் சேவையாற்றும் மருத்துவர்களுக்கான இடமாற்றங்களை வழங்க சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
இதற்கு எதிர்ப்புத் தெரவித்தே இந்த சேவைப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

