நீதியமைச்சருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை

341 0
இலங்கையின் வெளிவிவகார அமைச்சரைத் தொடர்ந்து நீதியமைச்சருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்கவுள்ளனர்.
இந்த விடயம் குறித்து நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெறவிருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த அரசாங்கத்தின் சில தரப்பினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் தாமதமாகின்றமை மற்றும் ஹம்பாந்தொட்டை துறைமுக ஒப்பந்தத்தை விமர்சித்தமை போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் ஏற்கனவே சில ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment