இலங்கையில் ஒரு லட்சம் பேரில் 14 தொடக்கம் 15 பேர் தற்கொலை செய்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் நடைபெற்ற சுகாதார மாநாடு ஒன்றில் உரையாற்றிய வைத்திய நிபுணர் திலினி ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
1990ஆம் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், தற்போது குறைவடைந்துள்ளது.
30 வயதுக்கு குறைவான ஆண்களே அதிகம் தற்கொலை செய்துக் கொள்வதாகவும், குறிப்பாக 14 தொடக்கம் 25 வயதான ஆண்கள் தற்கொலை செய்துக்கொள்வோராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களே அதிக அளவில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாகவும், ஆனால் அவர்களது முயற்சி பெரும்பாலும் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற அனுமதிப்பதுடன் நிறைவடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

