ரயான் உள்ளிட்ட ஐவரை கைதுசெய்ய மீண்டும் உத்தரவு

319 0

வைத்திய பீட மாணவர் ஒன்றிய செயற்பாட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயான் ஜெயலத் உள்ளிட்ட ஐவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த ஐவரையும் கைதுசெய்ய, முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும் இன்று மீண்டும் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருக்கவில்லை.

இந்தநிலையில், இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் விசாரித்த நீதவான், சந்தேகநபர்களை உடனடியாகக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a comment