அத்திடிய பிரதேசத்தில் வங்கியில் கொள்ளை முயற்சி; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

320 0

அத்திடிய பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். 

குறித்த வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

வங்கியில் கொள்ளையிடுவதற்காக வந்த கும்பல் ஒன்றினாலேயே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர கூறியுள்ளார்.

Leave a comment