முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தஸநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2008ம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், கடந்த 12ம் திகதி அவர் கைதுசெய்யப்பட்டார். இதனையடுத்து, இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதோடு, இன்று மீண்டும் கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதற்கமைய, சந்தேகநபரை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

