முட்டை வாங்கச் சென்றவர் மீது பொலிஸில் முறைப்பாடு

189 0

முட்டை வாங்கச் சென்றவர் கையடக்கத் தொலைப்பேசியை திருடிய சம்பவமொன்று கண்காணிப்பு கமாராவில் பதிவாகியுள்ளது.

ஹட்டன் நகரின், இரண்டாம் ஒழுங்கை வீதியிலுள்ள கோழி முட்டை விற்பனை நிலையத்தில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முட்டை வாங்க வந்த குறித்த நபர் கடை உரிமையாளரின் கையடக்கத் தொலைப்பேசியை திருடிச் சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து கடை உரிமையாளர் தனது தொலைப்பேசியை காணாத நிலையில் கடையில் பொருத்தப்பட்டிருந்த கமராவின் பதிவை சோதனையிட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே கடை உரிமையாளரின் கையடக்கத் தொலைப்பேசியை திருடிய நபர் இனங்காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணையை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment