வெளிநாடுகளுக்கு ஒரு அங்குல நிலமும் வழங்கமாட்டோம்-சிறி­சேன

213 0

எதிர்­கா­லத்தில் மேற்­கொள்­ளப்­படும் வெளி­நா­டு­க­ளு­ட­னான ஒப்­பந்தத்தின் போது இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­படும் அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளுக்­காக இல ங்­கையின் ஒரு அங்­குல நில­வு­ரி­மையை கூட வழங்க முடி­யாது என்ற விட­யத்தை சேர்க்க வேண்டும்  என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

இலங்கை சீன நட்­பு­றவுச் சங்­கத்­திற்கு அறு­பது ஆண்­டுகள் பூர்­தி­யா­வ­தை­யிட்டு கொழும்பு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பூர்­தி­யா­வ­தை­யிட்டு கொழும்பு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தற்­கா­லத்தில் இலங்கை பின்­பற்­று­கின்ற வெளி­நாட்டு கொள்­கை­யினால் அனைத்து வெளி­நா­டு­க­ளு­ட­னு­மான நட்­பு­றவு வலு­வாக பேணப்­ப­டு­கின்­றது. எமது நாட்டின் இந்த கொள்­கை­யா­னது உலக பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­க­ளுக்கும் முக்­கி­ய­மான அம்­ச­மாக கரு­தப்­ப­டு­கின்­றது.

காலத்­திற்கு ஏற்ப இன்று உலக பொரு­ளா­தார பல­வான்­க­ளாக இருக்­கின்ற நாடு­க­ளு­ட­னான உறவு மிக முக்­கி­ய­மா­னது. நாம் வறு­மை­யான நாடு என்­பதை கஷ்­டத்­து­ட­னா­வது ஏற்­றுக்­கொள்­ளத்தான் வேண்டும். அதனால் தான் பொரு­ளா­தார பல­மிக்க நாடு­க­ளு­டைய உதவி எமக்கு தேவைப்­ப­டு­கின்­றது.

அந்த நாடு­க­ளுடன் உற­வு­களை பேணி­னாலும் இலங்­கையின் சுயா­தீன தன்­மையை நாம் அவ்­வண்­ணமே பாது­காக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருப்போம். உலக பல­னாக இருக்­கின்ற நாடு­களில் வாழும் மக்கள் சமூகம் போன்­ற­தொரு மேம்­பட்ட சமூ­க­மாக எமது நாட்­ட­வரும் உரு­வெ­டுக்க வேண்டும்.

அதேபோல் நாட்­டின அபி­வி­ருத்தி பய­ணத்தில் இணைந்­துக்­கொள்ள எமக்கு தூர­நோக்­கு­டைய சிந்­த­னைகள் மிக அவ­சி­ய­மாகும் என்­ப­தையும் நாம் உணர வேண்டும். மேலும் வெளி­நா­டுகள் வரி­சையில் சீனா எமக்கு வழங்­கிய உத­வி­களை ஒரு­போதும் மறந்­து­விட முடி­யாத உண்மை.

புலி­க­ளு­ட­னான யுத்த காலத்தில் சீன படை­யினர் வழங்­கிய பயிற்­சிகள், நிதி மற்றும் தொழில்­நுட்பம் சார் உத­விகள் என்­ப­னவே யுத்­த­வெற்­றிக்கு பெரிதும் பக்­க­ப­ல­மாக காணப்­பட்­டது என்­பது ரக­சி­ய­மல்ல. நாட்டை பிளவு படுத்தும் நோக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்ட யுத்தின் போது சீனாவின் பங்­க­ளிப்பை நாம் ஒரு­போதும் மறந்­து­விட முடி­யாது. அதேபோல் அம்­பாந்­தோட்டை துறை­முக விவ­கா­ரத்­திலும் சீனா பெரிதும் எமக்கு உத­வி்­யி­ருந்­தது. அவ்­வா­றி­ருந்தும் எமது அர­சாங்கம் அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்­தத்­தினை மேற்­கொண்­டி­ருந்­தமை குறித்து கடு­மை­யான விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­ப­டி­ருந்­தன. இருப்­பினும் அவற்றை கருத்­திற்­கொள்­ளமால் நாட்டின் நலன் கரு­தியே நாம் செயற்­பட்டோம். மறு­பு­றத்தில் அந்த துறை­மு­கத்தின் நி்லவு­ரிமை எமது நாட்­டிற்கே இருக்க வேண்டும் என்­ப­திலும் உறு­தி­யாக இருந்தோம்.

அதனால் எதிர்­கா­லத்தில் வெளி­நா­டு­க­ளுடன் செய்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்ள ஒப்­பந்­தங்­க­ளிலும் இலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் போது நாட்டின் ஒரு அங்குல நிலவுரிமையை கூட வெளிநாடுகளுக்கு வழங்கபோவதில்லை என்ற நியதி சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். இது தொடர்பிலான தவறான கருத்துக்களை சிலர் மக்கள் மத்தியில் பரப்ப முற்படுகின்ற காரணத்தினாலேயே இன்று நான் விளக்கமளிக்கின்றேன் என்றார்.

Leave a comment