ரணில் விக்­ர­ம­சிங்­க­வினால் முடி­யாது-கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல

357 0

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பொரு­ளா­தார ரீதியில் நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­புவார் என்­கின்ற மக்கள் அபிப்­பி­ராயம் தற்­போது பொய்ப்­பித்­துள்­ளது. எனவே இளைய சமூ­கத்­தி­னரை போதைக்கு அடி­மை­யாக்­கி­விட்டு  தமது ஆட்­சியை முன்­னெ­டுப்­ப­தற்கு அர­சாங்கம் திட்­ட­மிட்­டுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பொர­ளை­யி­லுள்ள என்.எம்.பெரேரா நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாட்டைப் பொறுப்­பேற்று ஆட்சி நடத்­து­வா­ராயின் பொரு­ளா­தார ரீதியில் இலங்­கையைக் கட்­டி­யெ­ழுப்­புவார் என்ற அபிப்­பி­ராயம் கடந்த காலங்­களில் மக்கள் மத்­தியில் இருந்­தது. எனினும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் இரண்­டரை வருட ஆட்­சியின் பின்னர் தமது அபிப்­பி­ராயம் தவ­றா­னது என்­பதை மக்கள் புரிந்­து­கொண்­டுள்­ளனர்.

இனி­வரும் தேர்­தல்­களில் அந்த புரி­தலின் வெளிப்­பாடு தெரி­ய­வரும். அது தொடர்பில் நல்­லாட்சி அர­சாங்­கமும் நன்கு அறிந்­து­கொண்­டுள்­ளது. ஆக­வேதான் தேர்­தலை நடத்­தாது காலம் தாழ்த்தி வரு­கி­றது. மேலும் அர­சி­ய­ல­மைப்பில் 20 ஆவது திருத்தச் சட்­டத்தைக் கொண்டு வந்து மாகாண சபைத் தேர்­த­லையும் பிற்­போ­டு­வ­தற்கு எத்­த­னிக்­கி­றது.

தேர்தல் விட­யத்தில் அமைச்சர் பைஸர் முஸ்­தபா தான் “பொறுப்­புடன்” கூறிக்­கொள்­வ­தாக பல­முறை தெரி­வித்­துள்ளார். எனினும் அவர் கூறும் பொறுப்பு நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. ஆகவே அவர் இனி தேர்தல் விட­யங்கள் தொடர்பில் கருத்து வெளி­யி­டும்­போது “பொறுப்­புடன்” என்ற சொற்­பி­ர­யோ­கத்தைப் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது என அவ­ரிடம் வேண்­டிக்­கொள்­கிறேன்.

தற்­போது நாட்டில் எப்­போதும் இல்­லா­த­வாறு போதைப் பொருள் பாவனை அதி­க­ரித்­துள்­ளது. அதற்­கான பின்­ன­ணியை அர­சாங்­கமே அமைத்துக் கொடுத்­துள்­ளது. அதி­க­ளவான போதைப் பொருள் நாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தனால் அதன் விலையும் பாரி­ய­ளவில் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது.

மக்­களை போதைக்கு அடி­மை­யாக்­கி­விட்டு தமது சுய­நல அரசி­யலை முன்­னெ­டுப்­ப­தற்கே முயற்­சிக்­கின்­றனர். ஆபி­ரிக்க நாடு­க­ளிலும் இது­போன்றே நடை­பெ­று­கி­றது. அங்கு மக்கள் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக கிளர்­ந்தெழ முற்­ப­டும்­போது மக்­களை போதைக்கு அடி­மை­யாக்­கு­கின்­றனர்.

போதைக்கு அடி­மை­யான பின்னர் மக்கள் நாட்டு அர­சியல் தொடர்­பிலோ வேறு விட­யங்கள் தொடர்­பிலோ அக்­கறை காட்டாது அன்றாடம் தமக்குத் தேவையான போதைப்பொருள் பெற்றுக்கொள்வதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

எனவே தற்போது எமது நாட்டிலுள்ள பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைய சமூகத்தினரையும் அதே நிலைக்கு இட்டுச்செல்லும் நடவடிக்கை களையே அரசாங்கம் மேற் கொண்டு வருகின்றது என்றார்.

Leave a comment