எல்லை தாண்டி நெடுந்தீவு அருகே 3 படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நெடுந்தீவு மேற்கு கடற்பகுதயில் 9.5 கடல் மைல், 06 மற்றும் 07 கடல் மைல்கள் தொலைவில் இலங்கை கடற்பரப்பில் வைத்து நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை வேளையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட முறையை பயக்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதன்மூலம் கடல் வள்ஙகள் அழிவடைவதாகவும் அறியப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகள் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படை கூறியுள்ளது..
இவ்வாறு சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடித்த போது கைது செய்யப்பட்ட 77 இந்திய மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர்.
அதேவேளை நேற்றைய தினமும் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடித்த 49 இந்திய மீனவர்கள் மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

