சுன்னாகத்தில் 3 ஆவா குழு உறுப்பினர்கள் கைது 

316 0

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் மேலும் மூன்று ஆவா குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மாணிப்பாய் மற்றும் சுன்னாகம் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனது.

இந்தநிலையில் அவர்கள் இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட உள்ளனர்.

இதனிடையே, ஆவா குழுவின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் மற்றுமொருவர் யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அவர் யாழ்ப்பாணம் காவற்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment