வடகொரியா ஆட்சி மாற்றத்துக்கு ஏதுவான செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஜிம் மெட்டிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள குவாம் தீவை நோக்கி சக்திவாய்ந்த ஏவுகணையைக் கொண்டு தாக்குதல் நடத்துவது குறித்து பரிசீலிப்பதாக வடகொரியா எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
வடகொரியாவின் செயற்பாடுகள், அந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும், பொதுமக்களை மேலும் சிக்கலுக்குள் தள்ளவும் ஏதுவாக அமைகின்றன.
இவ்வாறான செயற்பாடுகளை வடகொரியா நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

