எமக்கும் அமைச்சு தேவை- ஆதிவாசிகளின் தலைவர்

314 0

ஆதிவாசிகளின் பொறுப்புக்கள் அரசாங்கத்தின் ஒரு அமைச்சின் கீழ் கொடுக்கப்படல் வேண்டும் என ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியல அத்தோ தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆதிவாசிகள், வேறு நாடுகளிலுள்ள ஆதிவாசிகளைப் போன்று சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவதில்லை என்பதை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் வன்னியல அத்தோ சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹியங்கன தம்பான மொரபெத்தேயில் இடம்பெற்ற ஆதிவாசிகள் தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தேசிய மொழிகள் அமைச்சுக்கு ஆதிவாசிகளின் மொழியைப் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது. இந்த நாட்டில் எத்தனையோ அமைச்சுக்கள் இருந்தும், ஆதிவாசிகளுக்கென்று ஒரு அமைச்சு இல்லை. எம்முடைய பிரச்சினைகளை நாமே தான் பேசுகின்றோம்.

நாம் இதற்கு முன்னரும் இந்தக் கோரிக்கையை முன்வைத்தோம். எமக்குப் பாராளுமன்றம் செல்லத் தேவையில்லை. எமது விடயங்களுக்குப் பொறுப்பான ஒரு அமைச்சு தேவை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment