முதலமைச்சர் கேட்டாலும் நான் அமைச்சிப்பொறுப்பில் இருந்து இராஜினாமா செய்ய தயார் இல்லை!-டெனிஸ்வரன்

304 0
எறும்பு என்பது ஒரு சிறியது.வேண்டும் என்றால் அதனை நிலத்தில் போட்டு காலினால் மிதித்து விட்டுச் செல்லலாம்.ஆனால் அதே எறும்பு தப்பித்தவரி யானையின் காதுக்குள் போகுமாக இருந்தால் யானையானது தானாகவே மரத்தில் அடிபட்டு செத்து விடும்.என வடமாகாண மீன் பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் இன்று புதன் கிழமை(9) காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,
வடமாகாண சபையின் அரசியல் சார்ந்த அசாதாரண சூழ்நிலைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றது.முக்கியமாக முதலமைச்சர் அவர்கள் விசாரனைக்குழுவின் அறிக்கையின் படி செயல் படாமல் விட்டமையே முதன்மையான காரணமாக உள்ளது.
முதலமைச்சர் அவர்கள் அமைச்சர் வாரியத்தை மாற்ற வேண்டும் என்று சொன்னால் விசாரனைக்குழுவை நியமிப்பதற்கு முன்னரே அவருக்கு இருக்கின்ற அதிகாரத்தை வைத்து அமைச்சர்களை மாற்றுவதற்கான அதிகாரம் இருக்கின்றது.
ஆனால் நியாய பூர்வமாக செயற்பட வேண்டும் என்ற அடிப்படையில்,முதலமைச்சர் அவர்கள் விசாரனைக்குழுவை வைத்து அதன் பின்னர் அறிக்க ஒன்று வந்ததன் பின்னரும் அதனை சரியாக அமுல் படுத்த தவறியமை உண்மையில் வேதனைக்குறிய விடையமாகும்.
இந்த நிலையில் ஏனைய அமைச்சர்கள் தமது அமைச்சுப்பொறுப்பில் இருந்து இராஜினாமா செய்துள்ள போதும் முதலமைச்சர் அவர்கள் என்னிடத்தில் இராஜினாமா செய்யுமாறு கேட்கவில்லை.
அவ்வாறு கேட்டாலும் நான் இராஜினாமா செய்யவதற்கு தயார் இல்லை.ஏன் என்று சொன்னால் இது வரையிலும் எனது நிலைப்பாடு ஊழல் செய்யவில்லை என்பது.அது தொடர்பில் சரியாக விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தோம்.
கடந்த வருடம் ஆரம்பத்தில் விசாரனைக்குழுவை நியமிக்க வேண்டும்.அதனை நியமித்து உடனடியாக விசாரனை செய்ய வேண்டும் என்று என்று கூறிய நபர் நான்.அந்த விடையம் முதலமைச்சருக்கும் தெரியும்.கன்ஸாட் பதிவிலும் ஆதாரத்துடன் உள்ளது.
என்மீது குற்றம் சுமத்திய மாகாண சபை உறுப்பினர் அவர்கள் சாட்சியமளிக்க சமூகமளிக்காமைக்கான காரணம் ஜெனிவாவில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் குறித்த மாகாண சபை உறுப்பினர் குறித்த காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் இருந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளது.
ஆனால் அவ்வாறான பாரதூரமான ஒரு குற்றத்தை முன் வைத்த மாகாண சபை உறுப்பினர் அவர்கள் விசாரனைக்கு தனது சாட்சியத்தை சரியான முறையில் பதிவு செய்யவில்லை என்பது கண்டனத்திற்குறியது.உண்மையில் சட்டத்திற்கு முறனாக இருக்கின்றது.
அவ்வாறான மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு தற்போது அமைச்சுப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.முதலமைச்சராக இருந்தாலும் சரி நானாக இருந்தாலும் சரி சட்டத்திற்கு எதிராக செயற்பட முடியாது.
சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது நியதி.அந்த அடிப்படையில் இன்று வரை என்னைப்பொருத்த மட்டில் எனது நிலைப்பாடு சரியாக இருக்கின்றது.முதலமைச்சர் அவர்கள் வேண்டும் என்று சொன்னால் தனது அதிகாரத்தை பயண்படுத்தில் என்னை அமைச்சுப்பொறுப்பில் இருந்து நீக்க முடியும்.
அதனை செய்வாராக இருந்தால் நான் மிகவும் சந்தோசமாக ஏற்றுக்கொள்வேன். 2013 ஆம் ஆண்டு முதலமைச்சர் என்னிடம் அமைச்சுப்பொறுப்பை எவ்வாறு நேர்மையாகத் தந்தாரோ அதே போன்று இன்று வரையிலும் அந்த அமைச்சுப்பொறுப்பிற்கு எந்த வித கலங்கமும் இன்றி தூசுகளும்,மாசுகளும் படாத வகையில் பாதுகாத்து வந்துள்ளேன்.
எனவே முதலமைச்சர் அவர்கள் தற்போது எடுக்கின்ற நிலைப்பாடுகள்,ஒட்டு மொத்தத்தில் மக்கள் ஒற்றுமையாக இருப்பதினை சீர் குழைப்பதாகவும், இருக்கின்ற பங்காளிக்கட்சிகள் பிளவு படுகின்றது போன்று காணப்படுகின்றது.
அந்த நிலையில் இருந்து மாறி ஒரு நீதியரசர் சரியான முறையில் செயற்பட வேண்டும்.  ‘எறும்பு என்பது ஒரு சிறியது.வேண்டும் என்றால் அதனை நிலத்தில் போட்டு காலினால் மிதித்து விட்டுச் செல்லலாம்.ஆனால் அதே எறும்பு தப்பித்தவரி யானையின் காதுக்குள் போகுமாக இருந்தால் யானையானது தானாகவே மரத்தில் அடிபட்டு செத்து விடும்.இன்றைய சூழ்நிலையில் இருக்கின்ற முக்கியமான ஒரு விடையம் எல்லோறும் ஒற்றுமைப்பட வேண்டும்.நியாயமாக செயற்பட வேண்டும்.
எமது மக்கள் கடந்த காலத்தில் பட்ட கஸ்ட துன்பங்களுக்கு அர்த்தம் தேட வேண்டும்.யாரும் தற்போதுள்ள அரசியல் சூழ் நிலையினை வைத்துக்கொண்டு குளிர் காய்வதற்கு யாரையும் அனுமதிக்க முடியாது.முதலமைச்சர் நியாயமாக செயற்படுவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.
முதலமைச்சருக்கு அமைச்சர் வாரியத்தை நியமிப்பதற்கும்,அதனை நீக்குவதற்கும்  பூரண அதிகாரம் அரசியல் அமைப்பில் இருக்கின்றது.ஆனால் குறித்த அதிகாரம் எந்த சந்தர்ப்பத்திலும் எதேச்சி அதிகாரமாக இருக்க முடியாது.
அதனை செய்வதாக இருந்தால் விசாரனைக்குழுவை நியமிப்பதற்கு முன் முதலமைச்சர் அவர்கள் அதனை செய்திருக்க முடியும்.
ஆனால் விசாரனைகளின் பின்னர் இரண்டு அமைச்சர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பின்னரும், அதனைத்தொடர்ந்த இரண்டு அமைச்சர்களையும் கட்டாய விடுமுறையில் செல்ல கூறியமையானது பிழையான விடையமொன்றாக காணப்படுகின்றது.
தற்போது மீன்பிடி போக்கு வரத்து அமைச்சரான என்னை இராஜினாமா செய்யுமாறு முதல்வர் கோரிக்கை விடுத்திருப்பதாக நான் ஊடகங்கள் மூலமாக அறிகின்றேன்.
அவ்வாறு அவர் கேட்பாராக இருந்தால் நான் இராஜினாமா கடிதத்தை வழங்க தயார் இல்லை.முதலமைச்சர் தனது அதிகாரத்தை பயண்படுத்தி இன்றைய தினமே என்னை அமைச்சுப்பதவியில் இருந்து நீக்க முடியும்.
அதனை செய்தால் மிக சந்தோசம்.மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுகின்றேன். அதன் பின்னர் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் ஒரு சட்டத்தரணியாக இருந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன்.
இதற்குப்பின்னால் இருக்கின்ற நியாய பூர்வமான விடையங்கள் என்ன? குறிப்பாக யார் யார் என்ன பிழை விட்டிருக்கின்றார்கள். முதலமைச்சர் அல்ல இருக்கின்ற பலர் தொடர்பான விடையங்களை கூறுவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.
ஆகவே ஒற்றுமையினை எந்த சந்தர்ப்பத்திலும் சீர் குழைய விடக்கூடாது.எம்மை நம்பியும்,எமது சந்ததிகளை நம்பியும் பல ஆயிரக்கணக்கான மக்களும், போராளிகளும் உயிரிழந்துள்ளனர்.
ஆகவே அந்த உயிர்த்தியாகங்களுக்கு அர்த்தம் தேட வேண்டும் என்றால் இருக்கின்ற பிரச்சினைகளை சரியாக இனம் கண்டு எது சரி என்றும், எது நியாயம் என்றும் ஏற்று நடக்க வேண்டும்.
தற்போது முதலமைச்சர் அவர்கள் தனது பக்கமுள்ள 14 உறுப்பினர்களுக்கு சார்பாக நடப்பதாக பொது மக்கள் மத்தியில் அதிர்ப்தி நிலை காணப்படுகின்றது.
புதிதாக அமைச்சர்கள் இருவரை நியமித்ததில் இருந்து இன்று வரை 30 மாகாண சபை உறுப்பினர்களையும் முதலமைச்சர் சந்திக்கவில்லை.ஆளும் கட்சி கூட்டம் இடம் பெறுகின்ற போதும் குறிப்பாக அண்மையில் இரண்டு கூட்டம் நடாத்தி இருக்கின்றார்.
தனக்கு சார்பாக இருந்த மாகாண சபை உறுப்பினர்களை மட்டும் வைத்து கூட்டங்களை நடாத்தி இருக்கின்றார்.தனக்கு சார்பாக இருந்த மாகாண சபை உறுப்பினர்களை மட்டும் வைத்து குறித்த கூட்டங்களை நடாத்தி இருக்கின்றார்.
சில தீர்மானங்களை எடுத்துள்ளார்.அதனை வண்மையாக கண்டிக்கின்றோம்.30 உறுப்பினர்கள் இருக்கின்றோம்.
 ஒரு குடும்பத்தில் பல கருத்து முறண்பாடுகள் ஏற்படுகின்றமை வழமை. அரசியல் என்பது மக்களுக்கானதொன்று.அவ்வாறு வருகின்ற போது பல கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றது.ஜனநாயக ரீதியாக பல கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றது.அவ்வாறான கருத்துக்களில் நியாயமான கருத்துக்கள் இருக்குமாயின் அதனை  ஏற்று நடக்க வேண்டிய தார்மீக பொறுப்பு முதலமைச்சருக்கு இருக்கின்றது.அதனை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.
முதலமைச்சர் அவர்கள் என்னை திட்டமிட்டு பலிவேண்ட வேண்டும் என்று நடப்பதாக நான் அறியவில்லை.அவ்வாறு நடக்கவும் இல்லை என்று நான் நம்புகின்றேன்.ஆனால் என் சார்ந்த கட்சி கடந்த காலங்களில் இரண்டு நிலைப்பாட்டில் இருந்திருக்கின்றார்கள்.
தற்பொது சில விடையங்கள் கட்சி ரீதியாகவும் இனக்கம் காணப்பட்டுள்ளது. ஆகவே அமைச்சுப்பொறுப்பிற்காகவே நான் போராடுகின்றேன் என்று யாரும் நினைத்து விடக்கூடாது.2013 ஆம் ஆண்டு முதல் இன்று வரை அமைச்சுப்பொறுப்பை தூய்மையாகவும் சரியாகவும் அர்ப்பனிப்போடும் சேவை செய்து வருகின்றேன்.சேவையில் திருப்தி இல்லை என்று சொன்னால் முதலமைச்சர் அவர்கள் என்னை நீக்கி விட்டு வேண்டிய நபரை நியமித்தக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment