பிரிட்டன் நாடாளுமன்ற குழுவினருடன் சம்பந்தன் சந்திப்பு

206 0

பிரிட்டனின் இணைக்கட்சி ஒன்றின் நாடாளுமன்ற குழுவினருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

காணாமல்போனோரின் உறவினர்களின் நிலைமை காணி விடுவிப்பு தொடர்பில் தாம் நேரடியாக பார்வையிட்ட விடயங்களை அவர்கள் சம்பந்தனிடம் எடுத்துரைத்தனர்.

இதன்போது கருத்துரைத்த சம்பந்தன்,

அரசாங்கத்தைப் பொறுத்தவரை சில விடயங்களில் காத்திரமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கிறது.

எனினும், அதன் வேகம் குறைவானதாகும்.

அது விரைவுபடுத்தப்பட வேண்டும்.

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்பட்டு அதனூடாக அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

பொதுமக்களின் காணிகளில் குடியிருக்கும் படைத்தரப்பினர், அதில் பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டிருப்பதும், அதனை பொதுமக்களிடம் மீள கையளிப்பதற்கு நிதியைக் கோருவதும் துரதிர்ஷ்டவசமான நிலைமை என சம்பந்தன் தெரிவித்தார்.

Leave a comment