வடக்கு பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில்

307 0

வட மாகாணத்திலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிக்காக சென்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக செல்லும் பெண்களின் எண்ணிக்கை ஆரம்ப காலத்தில் மிகவும் குறைவாகவே இருந்தது.

ஆனால் கடந்த 2015 ஆம் மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான வடக்குப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்றிருக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் கணவனை இழந்த பெண்கள், தமது குடும்பங்களுக்கு தலைமையேற்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே, அவர்கள் தமது குடும்பங்களின் வாழ்வாதார தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிக்காக செல்லும் நிலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில், வடக்கில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெண்கள் அடிமைகளாக கடத்தப்படுவதாக, யாழ்ப்பாணத்தில் இயங்கும் சமூக சேவைகள் அமைப்பொன்றினதும், மத்திய வங்கியினதும் தரவுகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக கணவன்மாரை இழந்து குடும்பங்களுக்கு தலைமை தாங்கும் பெண்கள் இவ்வாறான கடத்தற்காரர்களால் இலக்கு வைக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a comment