வட மாகாண சபை உறுப்பினர்களின் தீர்மானம் தொடர்பில் இறுதி முடிவு

260 0

வட மாகாண சபை உறுப்பினர்களின்  தீர்மானம்  தொடர்பில் செயற்குழுவை கூட்டி முடிவினை எட்டிய பின்பே அது தொடர்பான இறுதி முடிவு அறிவிக்க முடியும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.

வட மாகாண சபையின் புதிய அமைச்சரவை தொடர்பில் முதலமைச்சரின் விட்டுக்கொடுக்காத முனைப்பினையடுத்து புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் எவரும் அங்கம் வகிப்பதில்லை என வட மாகாண சபை உறுப்பினர்கள்  முடிவெடுத்து கட்சியின் செயற்குழு மற்றும் தலமைக்கும் அனுப்பி வைத்துள்ளனர். அது தொடர்பில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எனக்கேட்டபோதே மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் பதிலளிக்கையில் ,

வட மாகாண சபை உறுப்பினர்களின்  தீர்மானம்  தொடர்பில் செயற்குழுவை கூட்டி முடிவினை எட்டிய பின்பே அது தொடர்பான இறுதி முடிவு அறிவிக்க முடியும். மாகாண சபை உறுப்பினர்களின் தீர்மானம் எழுத்தில் வழங்கியுள்ளனர். இதனால் அடுத்த கட்டமாக  செயற்குழுவை கூட்டியே முடிவு எட்டப்படும். அதாவது வட மாகாண சபையில் தமிழரசுக் கட்சி குழப்பம் ஏற்படுத்துகின்றது அல்லது ஒத்துழைக்கவில்லை எனக் கூற அது தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சை எழுவதனை தவிர்க்கும் முகமாகவே மேற்படி முடிவு எட்டியதாக மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை தமிழ் மக்களின் அத்தியாவசிய பணியாக புதிய அரசியல் யாப்பு , காணாமல்போனோர் விடயம் , நில விடுவிப்பு , கைதிகள் விடுதலை மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனைகளை போன்ற முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தவேண்டியுள்ள நிலையில் இது ஓர் அநாவசிய விடயமாகவே தோன்றுகின்றது. எனவே   நாம் தொடர்ந்தும் அமைச்சரவை மாற்றத்தை பேசு பொருளாக மாற்றாது முழுமையாக ஒதுங்கியிருப்பது நல்லது என்றே எண்ணத்தோன்றுகின்றது.

எனவே இவற்றின் அடிப்படையில் அடுத்து செயற்குழுவை கூட்டியே முடிவினை எட்டமுடியும். அவ்வாறு முடிவு  எட்டிய பின்பு அது தொடர்பான இறுதி முடிவு அறிவிக்கப்படும். என்றார்.

Leave a comment