235 பேரை விடுவித்தது தாலிபான் அமைப்பு

226 0

தாலிபான் அமைப்பின் பிடியில் இருந்த பணைய கைதிகள் 235 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரத்தில் மர்சவலான் பிராந்தியத்தில் ஏற்பட்ட மோதல்களின் பின்னர் இந்த பணைய கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த மோதல்களின் போது 50 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

பலியானவர்களின் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக அந்த மோதலுக்கு பின்னர் தாலிபான் அமைப்பு அறிவித்தது.

அதுபோல் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தாம் தொடர்பு கொண்டுள்ளதாகவும் தாலிபான் அமைப்பு அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment