ராணுவ பயிற்சி எதிரொலி: அமெரிக்க தீவு மீது ஏவுகணை வீச வடகொரியா திட்டம்

245 0

அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் குயாம் தீவு மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் க்வாசாங்-12 ஏவுகணையை வீசி தாக்க வடகொரியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சமீப காலமாக வடகொரியா 5 தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. ஜூலையில் 2 முறை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்துள்ளது.அமெரிக்காவை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் ஐ.நா. சபை பொருளாதார தடை விதித்துள்ளது.

இது வடகொரியாவுக்கு கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இப்பொருளாதார தடை எங்கள் இறையாண்மைக்கு எதிரானது. அதற்கு அமெரிக்கா உரிய விலை கொடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பசிபிக் கடலில் உள்ள தனக்கு சொந்தமான குயாம் தீவு பகுதியில் அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ளது.

இதனால் கடும் எரிச்சல் அடைந்த வடகொரியா ராணுவம், ‘‘தற்போது அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் குயாம் தீவு மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் க்வாசாங்-12 ஏவுகணையை வீச திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வட கொரியாவுக்கு கடும் எச்சரிக்கையுடன் மிரட்டல் விடுத்துள்ளார்.

Leave a comment