லலித் ஜயசிங்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

11545 42

புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் சுவிஸ் குமார் தப்பிப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  ஊர்காவற்றுறை நீதிவான் மொஹமட் மிஹால் இன்று (08) உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, லலித் ஜயசிங்கவின் பதவியினை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment