வட மாகாண சபையின் தமிழரரசுக் கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றுகூடுமாறு அழைப்பு

211 0

வட மாகாண சபையின் தமிழரரசுக் கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் நாளைய தினம் எதிர்க்கட்சி அலுவலகத்தில் ஒன்றுகூடுமாறு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

வட மாகாண சபையில் நிலவும் உட் கட்சி சர்ச்சையை அடுத்து கடந்த 5ம் திகதி முதலமைச்சரின் இல்லத்தில் கூட்டமைப்பின் தலைவர் சகிதம் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சித் தலைவர்கள் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் சகிதம் விசேட சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது சில தீர்வு எட்டப்பட்டபோதும் திருப்தி ஏற்படாத தன்மையே காணப்பட்டது.

அந்த அதிருப்தியின் அடிப்படையில் தமிழரசுக் கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் ஒன்றுகூடி முதலமைச்சரால் புதிதாக அமைக்கப்படும் அமைச்சரவையில் தாம் யாருமே அங்கம் வகிப்பதில்லை என்ற முடிவினை எட்டினர். அவ்வாறு எட்டப்பட்ட முடிவு கட்சியின் தலமைக்கு அறிவித்தனர்.

இந்த நிலையிலேயே கூட்டமைப்பின் தலைவர் இந்த அழைப்பினை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் பலரும் குறித்த சந்திப்பில் கலந்துகொள்வார் என எதிர்பாக்கப்படுகின்றபோதும் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் சபை அமர்வு மற்றும் முதல் நாள் இடம்பெறும் கூட்டங்கள் காரணமாக கலந்து கொள்ளமுடியாது என அறிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பானது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கையளிக்கும் நிகழ்வில் பங்குகொண்டிருந்தமையினால் எழுந்த விமர்சனங்கள் காரணமாகவும் இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

Leave a comment