யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.
யாழ். நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் இன்று இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது சந்தேகநபர் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்
நீதிபதி இளஞ்செழியனின் கார் சாரதி, சக பொலிஸ் பாதுகாவலர் மற்றும் சந்தேகநபர் பறித்து சென்றதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் செல்வராசா ஜெயந்தன் (39) அடையாளம் காட்டியுள்ளனர்.

