நீதிபதி எம்.இளஞ்செழியன் அவர்களுக்கும் முன்னால் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்கும் இடையில் சந்திப்பு

346 0

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் அவர்களுக்கும் முன்னால் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஆனந்த வீரசேகரவிற்கும் இடையில் நல்லிணக்க சந்திப்பொன்று இடம்பெற்றது.

இளஞ்செழியனின் குறிக்கப்பட்ட இறந்து போன பாதுகாவலரின் மனைவியிடம் காலில் விழுந்த சம்பவத்தை தொலைக்காட்ச்சியில் கண்ணால் பார்த்த முன்னாள் இராணுவ அதிகாரி உடனடியாக அனுமதி வாங்கித்தருமாறும் அவரை நேரடியாக சந்தித்து கதைத்து எங்களுக்கு இனரீதியான வேறுபாடு இல்லை என கூறவேண்டும் என்ற நோக்கத்தோடு வந்தார்.

இன்று 9 மணியளவில் முன்னால் இராணுவ தளபதி வந்து நீதிபதிக்கு மகாசங்கம சம்பந்தமான புத்தகக்கத்தை அன்பளித்து குறிக்கப்பட்ட இச்சம்பவமானது உலகரீதியாக இலங்கையினுடைய நற் பெயரை கொண்டுள்ளது எனவும் கண்ணீருக்கு சாதியில்லை உணர்ச்சிகளுக்கு சாதியில்லை உணறுகளுக்கு சாதியில்லை என தெரிவித்து பிரார்த்தனை செய்து நீடூழிகாலம் வாழ்க என நீதிபதியை வாழ்த்தினார்.

Leave a comment