அதிவேகநெடுஞ்சாலைகளில் பயணிக்கும் நோயாளர் காவுகை வாகனங்களுக்கு கட்டணம் இல்லை – ஆராயப்படுகிறது

370 0
அதிவேகநெடுஞ்சாலைகளில் பயணிக்கும் நோயாளர் காவுகை வாகனங்களுக்கு கட்டணங்களை அறவிடாதிருப்பதற்கான யோசனை ஒன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. 
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
நோயாளர் காவுகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, அதற்கான கட்டணத்தை சுகாதார சேவையாளர்கள் வழங்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
இதுதொடர்பில் வைத்தியசாலைத் தரப்பினர் தமக்கு முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், இந்த யோசனையை கொண்டுவரவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment