சகல மாகாண சபை தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பான அரசியல் யாப்பின் 20வது திருச் சட்டம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒக்டோபர் மாதம் அறிவிக்கப்படவிருந்த கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் பிற்போடப்பட்டுள்ளன.
இலங்கை அரசியல் யாப்பின் 20 திருத்தச் சட்டத்தின்ன் ஊடாக ஜூலை மாதம் 28ஆம் திகதி அச்சிடப்பட்ட அந்த வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் 3ஆம் திகதியே வெளியிடப்பட்டது.
அதன்மூலம் சகல மாகாண சபைகளுக்குமான பிரதிநிதிகளை ஒரே தினத்தில் தெரிவு செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான தினம் நாடாளுமன்றத்தினால் தீர்மானிக்கப்படும் எனவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் சகல மாகாண சபைகளும் ஒரே தினத்தில் கலைக்கப்படும்.
மாகாண சபைகள் கலைக்கப்படுவது தொடர்பான சரத்துக்களும் அந்த வர்த்தமானி ஊடாக திருத்தப்பட்டுள்ளன.
ஆட்சி காலம் நிறைவடைந்துள்ள சம்பரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு ஆகிய மாகாண சபைகளுக்கான வேட்பு மனுக்கள் குறித்து, ஒக்டோபர் 2ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய முன்னர் அறிவித்திருந்தார்.
அதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு முன்னர் மாகாண சபை தேர்தல்களை நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும் அரசியல் அமைப்பின் 20 வது சீர்திருத்திற்கு அமைய மாகாண சபை தேர்தல்கள் அனைத்தும் ஒரே தினத்தில் நடத்தப்படவுள்ளதால் குறித்த மாகாண சபைகளுக்கான தேர்தல் தாமதிக்கவுள்ளது.

