பிணை முறி விநியோக மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு, பேர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த நிறுவனத்தின் பிரதான கணக்காளரும் இன்று சாட்சி வழங்க அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால், பிணை முறி விநியோக மோசடி குறித்த விசாரணைகளின், சட்ட மா அதிபர் திணைக்களத் தரப்பு சாட்சிப் பதிவுகள் நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில் இன்று முதல் பேர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் சாட்சிப் பதிவுகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணைக்குழுவினால் கடந்த வாரம் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் சாட்சி பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

