தென்னாப்பிரிக்க ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று

323 0

தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி ஜெக்கோப் சூமோவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்றையதினம் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வருகிறது.

ஜெக்கோப் சூமாவிற்கு எதிராக பல்வேறு ஊழல்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்நிமித்தம் ஏற்கனவே பல நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட போதும், ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் பெரும்பான்மை ஆதரவின் காரணமாக இந்த நம்பிக்கையில்லா பிரேரணைகளில் இருந்து அவர் தப்பிவந்துள்ளார்.

இந்த நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை இரகசியமான முறையில் நடத்த வேண்டும் என்று எதிர்கட்சி அரசியல்யாப்பு நீதிமன்றத்தில் முறைப்பாடு முன்வைத்தது.

இதனை அடுத்து இந்த முறை இரகசியமாக வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

1994ஆம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்காவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment