அமைச்சர் ரவி குறித்து இன்று தீர்மானம் – கட்சி தலைவர்கள் கூடுகின்றனர்

326 0

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைத் தொடர்பில், கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று நடைபெறவுள்ளது.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

ரவிகருணாநாயக்க நிதி அமைச்சராக இருந்தக் காலப்பகுதியிலும் நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டு தோல்வி அடைந்திருந்தது.

இந்த நிலையில் தற்போது பிணை முறி விநியோக மோசடியுடன் அவர் தொடர்பு படுத்தப்பட்டுள்ள நிலையில், மகிந்த அணியினர் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்துள்ளனர்.

இது குறித்து இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment