இலங்கையில் தொடரும் வறட்சி – 12 லட்சம் பேர் பாதிப்பு

339 0

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

வறட்சியால் பலர் குடிநீர் இன்றிய நிலையில் காணப்படுவதாகவும் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கடும் வறட்சி காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட மாகாணமாக வடக்கு மாகாணம் காணப்படுகின்றது.

அங்கு சுமார் 5 லட்சம் பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடமேல் மாகாணத்தில் சுமார் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வடமத்திய மாகாணத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment