ஆளும் அரசாங்கத்தை மக்கள் அகற்ற நினைப்பது ஏன்? – அனுரகுமார விளக்கம்

312 0

ஆளும் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை காரணமாகவே, அரசாங்கத்தை தற்போது மக்கள் அகற்ற நினைப்பதாக ஜே.வி.பிகூறுகிறது.

சூரியவௌ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து, ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அரசாங்கத்தை தற்போது மக்கள் அகற்ற நினைக்கின்றனர்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறியுள்ளது.

களவு, கொள்ளை, மோசடிகள் என கூறிவந்தாலும் அவை குறித்து உரிய விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் தவறியுள்ளதாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment