ஆளும் அரசாங்கம் களவுகளை ஒருபோதும் அனுமதிக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அம்பேவலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மறுசீரமைக்கப்பட்ட அம்பேவலை பாற்பண்ணையை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று பிரதமர் தலைமையில் இடம்பெற்றது.
தங்களுடைய முதலீடுகள் அனைத்தும் நாட்டை வளப்படுத்துவதற்கே.
முன்னாள் அரசாங்கத்தால் 320 கோடி ரூபா செலவு செய்து சூரியவௌ மைதானம் அமைக்கப்பட்டது.
ஆனால் அங்கு தற்போது காட்டு யானைகள் தொல்லையாக உள்ளது.
அதுபோல் 150 கோடி ரூபா செலவு செய்து ஹம்பாந்தோட்டை துறைமுகம் அமைக்கப்பட்டது.
எனினும் அதனால் உரிய பலன் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் தற்போது அது சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதால் அதன் மூலம் 140 கோடி ரூபா வருமானம் கிடைக்கின்றது.
எந்த துறைக்கு முதலீடு செய்தாலும் அது நாட்டுக்கு நன்மையானதாகவே அமைய வேண்டும்.
தவிர முதலீடு என்ற பெயரில் கொள்ளை மற்றும் களவுகளில் ஈடுபட யாருக்கும் அனுமதி கிடையாது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

