உயர் தர பரீட்சைகள் ஆரம்பம் – நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, நையினாத்தீவிலும் இந்தமுறை பரீட்சை மையங்கள்

361 0

கல்விப் பொதுத்தராதார உயர்தர பரீட்சைகள் இன்றையதினம் ஆரம்பமாகின்றன.

நாடெங்கிலும் அமைக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 230 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, நையினாத்தீவு ஆகிய இடங்களிலும் பரீட்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இந்த முறை பரீட்சைகளில் 1.5 மில்லியன் மாணவர்கள் பங்கேற்பதுடன், அவர்களில் 260 பரீட்சாத்திகள் விசேடத் தேவையுடையோர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரையி;ல் இந்த பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

Leave a comment