யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் வைத்து காவற்துறை அலுவலகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ‘ஆவா’ குழுவின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் என 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவற்துறை பயங்கரவாத விசாரணை பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் இரண்டாம் கட்ட தலைவர் நிஸா விக்டர் எனப்படும் இணுவில் நிஸாந்தன், கோப்பாய் தாக்குதல் சம்பவம் தொடர்பான முதன்மை சந்தேகத்துக்குரியவர் என கருதப்படுகிறது.
அவர் உள்ளிட்ட மேலும் மூன்று சந்தேகத்துக்குரியவர்கள் புறக்கோட்டை பகுதியில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதுதவிர மேலும் இரண்டு சந்தேகத்துக்குரியவர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 பேர் தொடர்பில் காவற்துறை மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் பயங்கரவாத விசாரணை பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஆவா குழுவின் இரண்டாம் கட்ட தலைவராக கருதப்படும் நிஸா விக்டரை தவிர ஏனைய அனைவரும் யாழ்ப்பாண நகர் மற்றும் கொக்கவில் பிரதேசத்தை சேர்ந்தவர்கள என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பாய் சம்பவம் தொடர்பில் 18 வயது இளைஞர் உள்ளிட்ட மேலும் ஐந்து சந்தேகத்துக்குரியவர்கள் பயங்கவராத விசாரணை பிரிவினரால் முன்னதாக கைது செய்யப்பட்டமை நினைவூட்டதக்கது.

