நாளை ஆரம்பமாகவுள்ள கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
பரீட்சைகள் ஆணையாளர் டபிள்வ்.எம்.என்.ஜே புஸ்பகுமார இதனை தெரிவித்துள்ளார்.
இந்த முறை இடம்பெறவுள்ள கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்காக மூன்று லட்சத்து 15 ஆயிரத்து 227 பேர் தோற்றவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலை 8.30 மணியளவில் பரீட்சை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் 8 மணிக்கு முன்னதாக பரீட்சார்திகள் பரீட்;சை மத்திய நிலையத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

