பொலன்னறுவை – மின்னேரிய ஆற்றில் நீராட சென்ற 50 வயதுடைய நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர், கொழும்பு மாநகர சபையில் பணிபுரியும் இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
நண்பர்கள் சிலருடன் நீராட சென்றிருந்த வேளையிலேயே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இதன் போது , மூன்று பேர் நீரில் மூழ்கியுள்ள நிலையில் , அதில ்இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் , இவர் காணாமல் போயிருந்த நிலையில் , அவரின் உடல் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த நிலையில் மீனவர்கள் சிலரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உயிரிழந்த நபர் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

