தெற்கு அதிவேக வீதியின் போக்குவரத்து வழமைக்கு

14700 38

தெற்கு அதிவேக வீதியின் கஹதுடுவ மற்றும் கொட்டாவுக்கு இடையிலான வாகன போக்குவரத்து மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பேலியகொடை பொதுச் சந்தைக்கு மீன் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றே குறித்த பிரதேசத்தில் நேற்று விபத்துக்குள்ளானது. நேற்று மாலை குறித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் தெற்கு அதிவேக வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதன்காரணமாக, மாத்தறையிலிருந்து வாகனங்கள் கஹத்துடுவ வழியாக வௌியேற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு 11 மணியளவில் குறித்த பாரவூர்தி அகற்றப்பட்ட நிலையில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது

Leave a comment